வேட்டை/மதுவந்தி

Q

சில சமயம் பசி வெல்லும்.
சில சமயம் உயிராசை
வெல்லும்.
மரத்தின் மேலமர்ந்து
பார்த்திருக்கும் நான்
மானும் இல்லை
புலியும் இல்லை.
என் வனத்தில்
எவர் இரை
எவர் வேட்டை
எனப் புரிவது இல்லை.