
செய்த குற்றம் ஒன்று
கீழமை நீதிமன்றம்
வழங்கியது விடுதலை
முடியாது பிடி அவனை
உயர்நீதிமன்றம்
தருகிறது ஆணை
செய்த குற்றம்
மற்றொன்று
கீழமை நீதியகம்
தந்தது தண்டனை
உயர்நீதிமன்றமோ
அருளியது விடுதலை
ஆகப்பெரும்
நீதிமன்றம்
இட்டது கட்டளை
யாருக்கும் இல்லை விடுதலை
குற்றம் ஒன்று
தண்டனை விதம் விதமாய்
வழக்கு உரை திறன்
நிர்ணயிக்குமாம் தீர்ப்பை
கண்கட்டிய நீதி தேவதை
வாயும் கட்டிக்கொண்டாள்
சரஸ்வதி நதி திரிவேணியில்
தெரிகிறதா கண்ணுக்கு.
