மழை விடியல்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

வானக்கூரையில் ஓட்டை
விழுந்த்தோ,.
தேவ மங்கையர் விழிநீர் ஆறாய்ப்
பெருகி
அருவியாய்க் கொட்டுகிறதோ.

இரவு முழுக்க பூமி நனைத்தும்
அடம்பிடிக்கும்
குழந்தை போல் இன்னும்
அழுகிறது.

தேவையோ அடைமழையில்
பயணம் ?
திட்டமிட்டால் என்ன?. முகூர்த்தம்
நின்றுவிடப்
போகிறதா?. முதல் மரியாதை
குறைந்து போகுமா ?

அரசுப் பேருந்து ஓட்டுனருக்கு
பிடித்து விட்டதா
கிறுக்கு? முன்னும் பின்னும்
பாராமல்
சடுகுடு வேகமெடுத்ததில்
கார் ஒன்று
இறங்கியது பள்ளத்தில், இன்னும்
ஒன்று
மரத்தில் மோதி யானை மிதித்த
பாகன் ஆனது.

நின்றது நாங்கள்தான் ,மின்னல்
போல்
மறைந்து போனது பேருந்து.

தரதரவெனக் கீழே இறக்கி
பளார் பளார்
எனக் கன்னத்தில் அறைந்திடும்
கோபம்
கொப்பளித்தது அத்தனை
முகத்திலும்.