அதிரன் கவிதை

இரையாய் அகப்பட்ட
எலியின் குடல்களை
கிளரி கொண்டிருக்கும்
காகம்
அறிந்திருக்கவில்லை,
தன் குஞ்சு ஒன்று
கழுகின்
கால் இடுக்கில்
கீசிட்டு கொண்டிருப்பதை