ம.சக்திவேலாயுதம் கவிதை

மழையில் நனைந்து
கவிதை எழுதினேன்…
வெயில் என்னை
புறக்கணித்தது…

வெயிலில் உருகி
சொற்கள் வடித்தேன்…
மழை என்னை
புறந்தள்ளியது…

மழையோ…வெயிலோ…
கவிதைகளற்ற
வாழ்க்கையுண்டோ
இங்கு?.‌.

ஆமென்று
மழையோடு கூடிய
வெயில் கவிதையாய்
என் மீது வீழ்ந்தது!