கிளி/க நா சு

மண்ணில் கிளிக் கூண்டு
பண்ணி வைத்தேன்,
சிவப்பு மூக்குப்
பச்சைக் கிளியே
‘வா வா’ என்றழைத்தேன்
அது வரவில்லை.

எனக்கு ‘வவ்வே’
காட்டிவிட்டு
அது தன் பாட்டில்
எதோ சொல்லிக் கொண்டே
பறந்து சென்றது.

வானத்துப் பாதை
மண்கூண்டில்
அடைபடுமா?
ஏன் எனக்கு
இது தெரியாமல் போச்சு
என்று சிந்திகிறேன் .