
கார்த்திகை தினத்தன்று
விரதமிருந்து பொரிஉருண்டை
பொங்கல்,சுண்டல்,மாவிளக்கு
செய்து
வாசல் பெருக்கி
கலர் கோலமிட்டு
நெற்றிநிறைய திலகமிட்டு
மல்லிக்கையோடு,புதுசேலை
அணிந்து மகாலெட்சுமி போல்
விளக்கேற்றுவாள் அம்மா
ஒளி எது?அவள் எது?
வித்தியாசமின்றி
இல்லத்தின் ஒளியாய்
ஒளிர்ந்தாள்.
அந்த ஒற்றைஒளியாள்
அத்தனை அகல்களுக்கும்
ஒளிர்ந்தது
அவளைப் போல் பண்டிகையை
இழுத்துக்கொண்டு வரமுயலுகிறேன்
அலுவலக விடுப்பற்ற சமயத்தில்
அகத்தை விளக்காக்கி
உயிரை திரியாக்கி
இல்லம் முழுவதும்
விளக்கேற்றி கொண்டிருக்கிறேன்
அந்த ஒளிதந்த தீட்சையினாள்
