மாண்டஸ் புயல்/அழகியசிங்கர்

எங்கள் வீட்டுக்
கதவுகளெல்லாம்
படபடவென்று
அடித்துக்கொண்டன
உற்சாகம் கொண்டு
வரவேற்கின்றனவா
‘மாண்டஸ்’ புயலை

சைஸ் சிறிதான
அடுக்கி வைத்த
புத்தகங்கள்
பதறியபடி கீழே
சரிந்தன
காரணமில்லாமல்

நல்லகாலம்
கரென்ட் போகவில்லை

வெளி உலகம்
தெரியாத பிரஜை நான்

மாண்டஸ் புயலே
என்னிடம்
மண்டியிட்டுச்
சொல்லிவிடு
என்னென்ன கொடுமைகள்
செய்தாயென்று