மகாகவி/ப. மதியழகன்

வள்ளுவன் கம்பனுக்கு அடுத்து பாட்டுக்கொரு புலவன் பாரதி
ஏரிகளும் ஓடைகளும் ஒரு நாளும் கடலாக முடியாது
அவன் தமிழ்க் கடல்
பாரதியின் மொழி ஆளுமையைக் கண்டு வள்ளுவனே வாய்ப்பிளப்பான்
அவன் தனது கவித்திறத்தால் கம்பனையேயே வம்புக்கு இழுப்பான்
அவன் கால்பட்டால் காவிரி கங்கையாகும் கல்லும் உயிர்த்தெழும்
அன்று அவன் யாசித்த போது பிச்சையிட யோசித்தவர்கள் இன்று கால வெள்ளத்தில் காணாமல் போனார்கள்
அன்று தமிழை தலை நிமிரச் செய்தவனுக்கு இன்று காசியில் சிலை வைத்தார்கள்
மண்ணுலகில் நூறு கவிகள் வந்து போகலாம்
அவன் ஒருவனே மகாகவி