
நிலத்தை
வானமாகப் பார்த்தான்
விவசாயத்தை
நெஞ்சில்
பச்சை குத்திக் கொண்டவன்.
தன்னை சிதைத்து
மீண்டும் பறக்கும் கழுகைப் போன்றே
காலம் புறம்தள்ளியும்
பறக்கலானான்
சுருங்கிய தோளுக்குள்
தன்னம்பிக்கையே
அவனின் சுவாசக் காற்று
ஒவ்வொரு வலிக்குள்ளும் கண்ணீர்தான்
அவனை பறக்க வைக்கும்
உந்துசக்தி
நீங்கள் மறந்த போதும்
இந்த நிலம் மறக்காது
பாலையிலும்
அவன் பெயர் சொல்லி
முளைக்கும்
புல்பூண்டும்
