பரம்பொருள்/கலாவதி பாஸ்கரன்

புவியினை படைத்த
பிரமன் என்பர்
கருணையுடன் காக்கும்
கண்ணன் என்பர்
அழிக்கும் ஆன்ற
ஈசன் என்பர்
மறைக்கும் பெருமான்
இவன் என்பர்
அன்போடு அருளும்
ஆண்டவன் என்பர்
பூச்சி புழு விலங்குகளில்
உறைபவர் என்பர்
மரம் செடி கொடியினில்
நிலைப்பவர் என்பர்
மண் , காற்று, விண், நீர்,
நெருப்பு ஐம்பூதங்களுக்கும்
இருப்பை கொடுக்கும்
இறைவன் என்பர்
அனைத்திலும் ஆதி ,நடு
அந்தம் நீ என்பர்
அந்தரத்தில் ஜீவ சாட்சியாக
இருப்பவர் என்பர்
அனைத்தும் நீதான் எனில்
கண்ணுள் தெரியாமல்
என்னுயிரில் உறையும்
உன்னை உணர
வைப்பாய் பரம்பொருளே.

One Comment on “பரம்பொருள்/கலாவதி பாஸ்கரன்”

Comments are closed.