பிஞ்சு மனம்/சிறகா

உடலும் மனமும் சோர்ந்து போக
வலி களின் அழுத்தத்தால்
துவண்டு போனது இரவு
மெளன மொழியில்
வருடிக் கொடுத்தது
நிலவின் ஒளி
இருளில் பொதிந்த
நட்சத்திர சிதறலாய்
எண்ணங்கள்
விம்மலை அடக்கி
வழியும் கண்ணீர்
அம்மாவின் மடி தேடி
தலையணையில் ஓய்வெடுக்கும்
பிஞ்சு மனம்.