யாதாகில் யாதோ இனி/அசித்தன்

கோட்டின் பின் உள்ள
புள்ளிகள் அறிகிலேன்

புள்ளிகள் இணையாத
புதிரும் அறிகிலேன்

காரியம் அறிகிலேன்
காரணம் அறிகிலேன்
கர்த்தாவும் அறிகிலேன்

உன்னை அறிகிலேன்
உள்ளாயா அரிகிலேன்
மறுக்கவும் மனதிலேன்

அறிவதற்கில்லை
அறிய
வேண்டுவதிமில்லை