
இல்லாததைப் போல
அழகானதொன்றும் இல்லை.
இல்லாததைக் கண்
உள்ளவர்களும் காண
முடியாது. விளக்கேற்றியும்
காணமுடியாது. இல்லாததால்
உபயோகம் ஒன்றுமில்லை;
அதைப்போல உபயோகமானாலும்
ஒன்றில்லை.
இல்லாததை அளக்க முடியாது – அழிக்க
முடியாது. என்னதான் இல்லை
என்று சொல்ல முடியாது.
உலகம் என்றுமே இல்லாததாக
இருந்திருந்தால்…
எப்படியெல்லாம்
நாம் உருவாகியிருக்கலாம்!
