
கொக்கு
நிலவின் ஒளி பகலாய்த் தெரிய
நீரோடையில்
தன்முகம் பார்த்து மயங்கி,
துள்ளும்
மீனைக் கொத்திட மறந்த
கொக்கு.
இறைவன் படைப்பில் எல்லாமே
அழகல்லவா !!
மாடுகள்
ஏர் பூட்டி, வண்டியோட்டி,செக்கிழுத்து
பசிதீர்க்க
குடம் நிறைக்கும் வள்ளல்கள்.
மானுடம்
தேடிய முதல் செல்வம், சங்கத்
தமிழனின்
வீரத்தின் உறைகல்.
இவர்கள்.
ஓய்ந்து போனால், இவர்களின்
ஊனுமா
நமது தேவை?.!.
வனம்
சிறுத்தை உலவும் வனம்,
கரடிகள் சுற்றும் வனம்,
யானை நடக்கும் வனம்,
புலிகள் பதுங்கும் வனம்,
நாகம் படமெடுக்கும்வனம்,
மான்கள் மிரளும் வனம்.
காட்டெருமை மேயும் வனம்,
கண்டு முயல் துள்ளும் வனம்,
இவை கண்டு மயில் ஆட,
குயில்கள் பாடும் வனம்.
ஒரு கூரையின் கீழ்.
இறைவன் படைப்பின் இரகசியம்
இதை அறிவது நமக்கு அதிசயம்.
