நான் பார்க்கும் வானம்/ஜெகந்நாதன்

மதியம் முதலே
வானத்தைப் பார்க்கிறேன்!
கதிரவனை வெளியே நடமாட முடியாதபடி
மேகக் கூட்டங்கள்
திரண்டு நிற்பதை!
அவ்வப்போது இதமான சாரலையும்
குளிரான காற்றையும்
அண்டவெளி வாங்கித் தருகிறது!
பொழுது போவது தெரியாமல்
ரசித்துக்கொண்டிருந்தேன்!
காற்றில் இசைக்கு
மரங்கள் நடனம் ஆடுவது
கண்கொள்ளா காட்சிகள்!
இப்படியே இருந்தால் என்ன?
எனத் தோன்றும் அளவுக்கு
அந்தி சாயும் நேரம்!
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்தி வேளையில்
ஒரு கோப்பை
தேனீர் அருந்துகிறேன்!