தேடிக்காண்பது/க.நா.சு

பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டு கொள்கின்றன. தேடிக் காண்பதுதான்
கவிதை. தேடாமல் காண இயலாது.