மாயத் திரை /சிறகா

கை நழுவிய கண்ணாடி பாத்திரம்
நினைவலை களில் மிதக்க
நீர் நிரம்பிய நிஜ குவளைகள்
கண்ணெதிரே கண்டாலும்
காணாது திரும்பும் விழிகள்
மாயத் திரை அகல் வது எப்பொழுது

நகராத மனம்
விடியலை நோக்கி

நடை பயில துவங்குவது
எப்பொழுது.