விதிமுறைகள்/க. நா. சு

சர்க்கார் அதிகாரிக்குச் சுதந்திரம்
கூடாது. விதிகள் அதிகரிக்க அதிகரிக்க
அவன் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கவிக்கோ விதிகள் தேவையில்லை.
தானே செய்து கொள்கிற விதிகளுக்குக்
கட்டுப்பட்டே அவன் கவிதை செய்ய இயலும்.
கவிகள் உடைக்கிற விதிகளைப்
பொறுக்கி எடுத்துச் சேகரித்து
கவிகள் கல்லாதார் இலக்கணம் வகுத்தனர்.
ஆனால் எந்த விதிகளுக்குமே
சொற்கள் ஆதாரம். நல்ல லாயர்
எவனையும் கேளு, செல்லுவான் –
எந்த வார்த்தைகளையும் எப்படி
வேண்டுமானாலும்
அர்த்தம் படுத்தலாம்.