
ஓடும் நதியில்
புறளும் துகள்கள்
கண்களுக்கு தெரிவதில்லை!
நதியின் வேகம்
அது தீர்மானிப்பதில்லை!
மேடு பள்ளங்களை உள்வாங்கி
வேகம் ஊற்றெடுக்கும்!
எது ஒன்றும் கண்களின் பார்வையில்
தெளிவாகத் தெரிவதில்லை!
கண்கள் தான் ஊடகம்
எனினும்
காட்சிகள் தீர்மானிப்பதில்லை!
ஒளி மிகுந்த கண்கள்
வலி தாங்கும்!
புது வழி காணும்!
