விசைகேற்ப ஆடும்தறி/செ.புனிதஜோதி

துக்க நாட்களில்
இப்படியாகத்தான்
பயணப்படுக்கிறேன்
கங்காருகுட்டியை
தூக்கிச் சுமக்கும்
காங்காருவைப்போல

சுற்றுச்சுவற்றை
மோதி விளையாடும்
கால்பந்தாய் சுழன்றுக்
கொண்டிருக்கும்
என் இருப்பை.
பலமுறை
வெறித்துப்பார்கிறேன்

தனிமை கோரமுகத்தை
பூசி நிற்கிறதுஆங்காங்கே

பிரச்சனையற்ற பிரச்சனைகளை
பாயைப்போல் விரித்து முடைந்து
கொண்டிருக்கிறேன்
சுருட்டி வைக்க இயலாமல்

காற்றாடியின் சுழற்சிகேற்ப
ஆடும் திரைசீலையாய் நான்