கலைஞன் / க, நா, சுரமணியம்

உலகத்துச் சோகமெல்லாம் அவன் முகத்தில்
கவிந்திருக்கிறது உலகமாந்தரின் பளுவை எல்லாம்
தன் தோளில் சிலுவையாகச் சுமந்திருக்கிருன்.
வானத்தை ரத்தமாகவும், கண்ணீராகவும்
கோடுகளாகவும், உருவமற்ற உருவங்களாகவும்
தீட்டி அவன் திருப்தியுறுகிறன். கைகள்
உலகுக்குக் குறி சொல்லத் துடிக்கின்றன.
தூரிகை ஏதோ கதையைச் சொல்ல வந்து
திரையை இடித்துத் தகர்க்கிறது எப்படிக்
தீட்டினேன், என்ன தீட்டினேன், ஏன் தீட்டினேன்
என்று எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. *
“என்னை ஏன் இப்படிப் புகழுகிறீர்கள்?”
என்று கேட்கிறேன் யாரும் பதில் சொல்லவில்லை.
எனக்கே நான் ஏதோ பிரமாதமாகத்தான்
சாதித்து கொட்டிவிட்டேனா என்று ஒரு
சந்தேகப் பொறி தட்டி விடுகிறது மேலும்
சோகமுகந்துடன் பளு சுமக்கும் தோளுடன்
வர்ணம் குழைத்து தூரிகை தீட்டித் திரையில்
லக்ஷ்யங்களை, கனவுகளை, ஏக்கங்களை
வடித்துக் கொண்டிருப்பது தவிர எனக்கு
வேறு குஒ வழியும் தோன்றவில்லை தெரியவில்லை.

                                            ஞானரதம் 1986