ஆங்கிலப் புத்தாண்டு /பி. ஆர். கிரிஜா

இனிய இரண்டாயிரத்து
இருபத்தி மூன்றே வருக !
இன்னல்கள் அனைத்தும்
களைக !
அன்பு
நெஞ்சங்களில்
மகிழ்ச்சி பொங்குக!
அவனியில் அமைதி
நிலவுக !
மனித நேயம் ஓங்குக!
தரணியில் ஏற்றத் தாழ்வு நீங்குக !
இயற்கையின்
செழுமை வளர்க !
வீண் புரட்சி வன்முறை
ஒடுங்குக !
மக்கள் வாழ்வு
வளர்ச்சி அடைக !
நீதி, நேர்மை, தர்மம்
மலர்க !
நோய், நொடி, பிணி
அகலுக !
அனைத்துயிர்களும்
புத்துணர்ச்சி பெறுக !
உலக நாடுகள்
ஒற்றுமையாய் வாழ்க !
அல்லல் களைந்து
ஆனந்தம் பெருக !
இனிய ஆங்கிலப்
புத்தாண்டே!
உனை வருக வருக
என ஆடிப் பாடி
வரவேற்கிறேன் !

31/12/2022