புத்தாண்டையை வரவேற்போம்/செ.புனிதஜோதி

ஓடிக்கொண்டிருக்கிறது
காலம்
ஒவ்வொரு வருடமும்
இறுதிநாளில் நிறுத்தி
ஆசுவாசப்படுத்தி
கடந்த நினைவுகளை
அசைப்போட்டு
பட்டாசுகள் வெடித்து
இனிப்புகள் வழங்கி
வாழ்த்துகள் பகிர்ந்து
அடுத்து ஓட
உற்சாகமூட்டும்
சடங்காய்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம்

கைவிரல் பிடித்து
நடக்கத் தொடங்கும்
குழந்தையைப்போல்
அதன் விசைகேற்ப நடக்கிறோம்.
தாயைப்போல் கனிவோடு
நடத்திசெல்லும்
நம்பிக்கையோடு