புத்தாண்டு/அழகியசிங்கர்

ஒவ்வொரு ஆண்டும்
புத்தாண்டின்போது
நம்மை நாமே
புரிந்துகொள்ள
முயற்சி செய்வோம்

**

கண் விழிக்கும் போதே
ஒரு ஆண்டு
ஒரு யுகமாகப் ஓடிவிட்டது

**

போன ஆண்டு
நம்மைக் கடந்து
போகும்போது
கொரனாவும் நம்மை
விட்டுப் போயிருந்தது

**
ஆனால்
எதிர் சுவரில்
தாங்கி நிற்கும் செடியில்
பூத்துக் குலுங்கும்
மஞ்சள் நிறப் பூக்கள்
இந்த ஆண்டும்
பூத்துக் குலுங்கட்டும்.

**
உலக
நாடுகள்
ஒன்றையொன்று
உரசாமல்
இருக்கட்டும்

*

இந்த ஆண்டாவது
உக்கிரைனை
ரஷ்யா
பெரிய மனது பண்ணி
விட்டு விடட்டும்
*

வயதாகி
விட்டதால்
நிற்க, நடக்க, உட்கார
இறைவன்
அருள் புரியட்டும்.

புத்தாண்டே வருக வருக
[23:29, 31/12/2022] Azhagiyasingar: புத்தாண்டு/அழகியசிங்கர்

ஒவ்வொரு ஆண்டும்
புத்தாண்டின்போது
நம்மை நாமே
புரிந்துகொள்ள
முயற்சி செய்வோம்

**

கண் விழிக்கும் போதே
ஒரு ஆண்டு
ஒரு யுகமாகப் ஓடிவிட்டது

**

போன ஆண்டு
நம்மைக் கடந்து
போகும்போது
கொரனாவும் நம்மை
விட்டுப் போயிருந்தது

**
ஆனால்
எதிர் சுவரில்
தாங்கி நிற்கும் செடியில்
பூத்துக் குலுங்கும்
மஞ்சள் நிறப் பூக்கள்
இந்த ஆண்டும்
பூத்துக் குலுங்கட்டும்.

**
உலக
நாடுகள்
ஒன்றையொன்று
உரசாமல்
இருக்கட்டும்

*

இந்த ஆண்டாவது
உக்கிரைனை
ரஷ்யா
பெரிய மனது பண்ணி
விட்டு விடட்டும்
*

வயதாகி
விட்டதால்
நிற்க, நடக்க, உட்கார
இறைவன்
அருள் புரியட்டும்.
**
போன ஆண்டில்
என்னை அறியாமல்
யாரையாவது
மனதளவு
காயப்படுத்தி இருந்தால்
என்னை மன்னித்து விடு சீசே
.

புத்தாண்டே வருக வருக