
பிரும்மனைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும்
வேதத்தில், உபநிஷத்தில் இப்படி இப்படிச்
சொல்லி யிருக்கிறார்கள். நீரில் கரைந்துவிட்ட
உப்பாக இருப்பான். விதையில் மறைந்த
மரமாக இருப்பான், பிறக்காத பிள்ளையை
உண்டாக்கும் பீஜமாக இருப்பான், தாயின்
உள்ளத்தில் இருக்கும் அளப்பரிய அன்பாய்
இருப்பான் “என்று சொல்லிமூச்சுவிட்ட
சகமாரைவனைத் தடுத்து நிறுத்தி” பிரும்மம்
எதுவாக இல்லை என்பதைமட்டும் நீ எனக்குச்
சொல் போதும் “என்றான் மற்றவன்
வேதத்தை உபநிஷத்தை அறிந்தவன் சற்று
யோசித்துவிட்டுப் பேசுவதைநிறுத்தி விட்டான்
