01.12.2023
துளி 2

பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் ஏராளமாய் வாங்கிக் குவித்திருக்கிறேன். மேரி லுட்டன்ஸ், பூப்புள் ஜெயகர் புத்தகங்கள். அதே போல் சத்குரு ஸ்ரீ ரமண மகரிஷியின் சரிதமும் உபதேசமும் என்ற புத்தகம்.
யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் டேஸ்ட் ஆப் லைப். உவே சாமிநாத ஐயரின் 'என் சரிதம்'. இன்னும் எத்தனையோ புத்தகங்கள்.
சமீபத்தில் நான் வாங்கிய இரண்டு புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு புத்தகம் 'நிமாய் கோஷ்' புத்தகம். ஆங்கிலத்தில் சுனிபா பாசு எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் அம்ஷன் குமார்.
இரண்டாவது புத்தகம் கலைஞர் மு.கருணாநிதி வரலாறு. ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆங்கிலத்தில் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் சந்தியா நடராஜன் மொழி பெயர்த்திருக்கிறார்.

