புத்தாண்டு 2023/ மதுவந்தி

இனிய புத்தாண்டு
இருபது இருபத்து மூன்று
வாழ்த்துகள்.
இருபதுக்குப்பிறகு
இருபத்து மூன்றா?
இருபது இருபது என
புலம்பியபடியே கழிந்தபின்,
கரோனா தீநுண்மியில்
கரைந்து போயின
இருபத்து ஒன்றும்
இருபத்து இரண்டும்.

வெட்ட வெட்ட முளைக்கிற
தலை கொண்ட அசுரன்,
உருமாறி உருமாறி
உயிரெடுக்கும் அசுரன்,
இவையெல்லாம் புராணம் தாண்டி
நிஜமாகி உலகைப்
புரட்டிய வருடங்கள்.
அந்த அனுபவங்கள்
கற்றுக் கொடுத்த
பாடங்களும் ஏராளம்.

நினைவில் கொள்பவை எவை?
நீக்க வேண்டியவை எவை?
எனும் ஞானம் சித்திக்கட்டும்,.
இந்தப் புத்தாண்டில்.

ஞானத்தின் சாரத்தைச்
செயலில் காட்ட
கவனமும் பொறுமையும்
கூடட்டும்.

ஞானவழி மனம் காட்ட
செய்து முடிக்க
உடல்வலு கிட்டட்டும்.

இனிய புத்தாண்டு
இருபது இருபத்து மூன்று
வாழ்த்துகள்.