
என் புலன உரையாடல்கள் பிதுங்கி வழிகின்றன
இன்று
புத்தாண்டு வாழ்த்துக்களால்
சேமிக்கும் அளவுக்கு
முக்கியம் எனக் கருதாத எண்களிடமிருந்து சில –
சுய அடையாளத்தை
சாமிப் படத்தில் மறைத்துக் கொண்டு
விச்வ ரூபம் எடுத்து பயமுறுத்தும்
ஜிஃப்களுடன் சில
என்னுடன் உறவு வைத்துக் கொள்வதில் ஏதோவொரு
லாபம் கிடைக்கும் எனும் எதிர்ப்பில் சில
சகிக்கிறேன் இவற்றை –
எனதன்புக்கும் மதிப்பிற்கும்
உரிய சிலரிடமிருந்து எளிமையான சொற்களுக்குள்
உண்மையான அன்பை நிரப்பி வரும்
ஒரு சில வாழ்த்துக்களுக்காக

நெல்லுக்கு இறைத்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்வது போல, நமக்கு பிரியமானவர்களின் வாழ்த்து வரும் என காத்திருக்கும் போது, மற்ற பதிவுகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது. என்ன செய்ய?.