பழங்கள்/க நா சு

அடுக்கடுக்காக ரத்தினங்கள் பதித்த
மாதுளங்கனி!
கொத்துக் கொத்தாகக் கறுப்பும்
நீலமுமாகத் திராட்சைகள்
திராட்சைகளைப் போட்டியிட்டு
வென்று விடும்
கருநாவல் பழங்கள்
சீப்பு சீப்பாக அடுக்கிய
சுடர்களாகச் செவ்
வாழைப் பழங்கள்,
கன்னம் அழகிய பெண்ணே
போலச் சிறந்த
மாம்பழங்கள்;
எத்தனை பழங்கள்!
எத்தனை ருசிகள்!