
பாராட்டிப் பாருங்கள்
இரண்டு மதிப்பெண்களில்
தேர்ச்சி தவறவிட்டவனை
ஒரேஒரு ஓட்டத்தில்
சதமடிக்க வாய்ப்பிழந்தவனை
காதலில் தோல்வியடைந்து
தாடி வளர்க்கும் நண்பனை
நடக்கும்போது
தடுமாறி விழுந்துவிட்ட
சிறு குழந்தையை
கிடைத்த வேலையை
விட்டுவிட்ட மகனை
உள்ளே சிக்கிக்கொண்டு
வர மறுக்கும் கவிதையை
பாராட்டிப் பாருங்கள்
நிச்சயம் தளிர்க்கொடி பூக்கும்
