
முன்பு விளம்பரம்
எனக்குப் பிடிக்காது…
வெளிச்சம்
எனக்கு ரொம்பப் பிடிக்கும்…
விளம்பரமின்றி
வெளிச்சம் உண்டோ?
விளம்பரம் தானே வெளிச்சம்
என்பதெல்லாம் உங்கள் கேள்விகள்?
உங்கள் கேள்விகள்
என் மனதில் சலனத்தை உண்டாக்கி
வியப்புக்குறியாக்கி
விளம்பரச் செய்திகளாக்கின!
இப்போது விளம்பரம்
கொஞ்சம் எனக்கு பிடிக்கிறது…
வெளிச்சத்தை எனக்கு
எப்போதும் பிடித்துவிடுகிறது!
ஒரு துளி
வெளிச்சத்தை அள்ளித்தரும்
மாத்திரையளவு விளம்பரம் போதும்
என் அடுத்த நகர்விற்கு…
ஒரு நொடி
விளம்பரத்தை அடையாளப்படுத்தும்
அரை நொடி வெளிச்சம் போதும்
என் அடுத்தடுத்த வெற்றிக்கு!
வெளிச்சத்தால் ஒரு விளம்பரமோ
விளம்பரத்தால் ஒரு வெளிச்சமோ
எதுவாக இருப்பினும்
வாழ்க்கை வெளிச்சமானால் போதும்!
