
நாலைந்து தெருக்கள் சந்திக்கும் ஒருஜங்ஷனில்
ஒரு ஆண் மகனின் பிணம் நாதியற்றுக் கிடக்கிறது.
“யார் பெற்ற பிள்ளையோ? எங்கிருந்து வந்து
இங்கே இப்படி விழுந்து கிடக்கிறதே!”
என்று உரக்கக் கேட்டுக் கொண்டே வந்த
வனைப் பார்த்துப் பிணம் எழுந்து உட்கார்ந்து
நகைத்த “நீ யார் பெற்ற பிள்ளையோ
எங்கிருந்து வந்து இந்தச் சந்தியில்
நிற்கிறாயோ எனக்குத் தெரியவில்லையே”
என்று கேட்டது. வந்தவன் பதில் சொல்லு
முன் “நான் சற்றுமுன் இருந்தேன் இன்று
இல்லை. இல்லை என்று போய் விட்டான்.
பேர் எதற்கு ஊர் அதற்கு?” என்று கேட்டு
விட்டுக் காலை நீட்டிப் படுத்து மீண்டும்
பிணமாகி விட்டது பக்கத்தில் நானும்.
போய்ப் படுத்து உயிர் நீத்து விட்டேன்.
மூன்றாவது பிணமாக யார் வருவதானாலும்
வரலாம்— ஊர்ப் பெயர் தெரிய வேண்டிய
அவசியம் எதுவுமே இல்லை!
(ஞானரதம் மார்ச் 1986)
