துளி 261/அழகிய சிங்கர்

இரண்டு புதிய கவிதைத் தொகுதிகள் 

27.08.2021 அன்று புதுவிதமாய் கவிதை எழுத வேண்டுமென்று தோன்றியது. 

வெண்பாவிற்குப் பதில் என்பா என்ற பெயரில்.  வெண்பா போல் 4 வரி வர வேண்டும். முதல் மூன்று வரிகளில் 4 சொற்கள். நாலாவது வரி 3 சொற்கள்.  எதுகை மோனை

 கிடையாது.  ஒரு வரிக்கும்

 இன்னொரு வரிக்கும் அர்த்தம் எதுவும் வரலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.முதலில்

 நான் சில கவிதைகள் எழுதினேன். அதைப் பார்த்துப் பலர் எழுதினார்கள்.  ஆர்.வி. சுரேஷ் ஒரே மாதத்தில் 150 கவிதைகள் எழுதி விட்டார். அதைத் தொடர்ந்து தஞ்சை ஹரணி

, வசந்த தீபன்

, திருநாவுக்கரசு, பூ.சுப்பிரமணி என்று எல்லோரும் 100 கவிதைகள் எழுதி முடித்து விட்டார்கள்.

தனியாக என்பா குழுமம்

 ஆரம்பித்து கவிதைகளைப் பதிவு செய்து கொண்டு வருகிறேன்.

வெண்பா எழுதுவது கொஞ்சம் கடினம்.  இலக்கண வாய்ப்பாடு தேவை.  ஆனால் என்பாவிற்குத் தேவையில்லை.  கொஞ்சம் கவிதை எழுத ஆர்வம் இருந்தால் போதும். என்பா கட்டுப்பாடு இல்லாத கவிதை.  இலகு கவிதை.

நான் கிட்டத்தட்ட 90 கவிதைகளுக்கு மேல் எழுதினேன். புத்தகமாகக் கொண்டு வரும் போது 61 கவிதைகள்தான் எடுக்க முடிந்தது.

வரும் புத்தகக் காட்சிக்கு என்பா என்பாதான் என்ற தலைப்பில் கவிதைப் புத்தகம் தயாரித்து உள்ளேன் .

அதேபோல் என்பா 110 என்ற தலைப்பின் கீழ் ஹரணி

 அவர்களின் கவிதைப் புத்தகமும் கொண்டு வந்துள்ளேன்.ஹரணி

 சிறப்பாகவே  கவிதைகள் எழுதி உள்ளார்.

என் கவிதை ஒன்றை உதாரணத்திற்குக் கொடுக்கிறேன்.

என்பா 30

என் வீட்டு வாசலில்

 செத்தஎலிகள்

. பூனைகள் சாப்பிடாமல் கொன்றுவிட்டுப்

போடுகின்றன. நாங்கள் அருவெறுப்பாகப்பார்த்துவிட்டுப்

போகிறோம்.  

பரந்தாமா உன் துணை.ஹரணி

 எழுதிய 79வது

 கவிதை.

நெருக்கடியான சாலையில் நிறைந்த மனிதர்கள்

அவரவர்க்கு ஆயிரம் சிக்கல்கள் உணர்வுகள்விடியலில்

 வானம் தெளிந்து நிற்கிறது

விடியல் இல்லா வாழ்வில்லை.

புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்திருக்கும் இந்த இரு புத்தகங்களையும் வரவேற்கவும்.