என்பா 110../ஹரணி

வணக்கம் என்பா 110 குறித்து முன்பு பதிவிட்டது பதிவிலிருந்து விடுபட்டுவிட்டது தவறுதலாக. ஆகவே மறுபடியும் பதிவிடுகிறேன். முன்பு கருத்துரைத்த நண்பர்கள் கருத்துரையிடவேண்டாம். அதற்காக இவ்விளக்கம்.

//////////////////////////////////////////////////////////////////////////

என்பா 110

வணக்கம். என்பா என்பது புதிய வகைக் கவிதை. வெண்பாப் போல என்பா என்பது. நவீன விருட்சத்தின் ஆசிரியர் திரு அழகியசிங்கர் அவர்கள் என்பா கவிதைக்குழுமம் என்று ஒன்றைத் தொடங்கினார். என்பா எழுதுவதற்கு முக்கிய விதிகளாக சிலவற்றை எளிதாக அவர் எடுத்துரைத்தார்.

அவ்விதிகள் பின்வருமாறு.

  1. இது வெண்பாவைப் போலிருக்கும் ஆனால் வெண்பா கிடையாது.
  2. என்பா புதுக்கவிதை பாணியில் இலக்கணத்தைத் துறந்து செயல்படுகிறது.
  3. என்பாவிற்கு ஒரே கட்டுப்பாடு மட்டும்தான் உள்ளது.
  4. ஒவ்வொரு வரியிலும் நான்கு சொற்கள் இருக்கவேண்டும். நாலாவது வரி 3 சொற்கள் இருக்கவேண்டும்.
  5. ஒவ்வொரு வரியும் தனித்தனியாக இயங்கும்.
  6. வெண்பாவைப்போல் ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் சம்பந்தம் இருக்க அவசியமில்லை.
  7. கவிதை வாசிக்கும் எல்லோருமே என்பாவை எளிதாக எழுதிவிடலாம்.
  8. என்பா கவிதையில் ஏதாவது ஒரு வரி வைர வரியாக மாறி இருக்கக்கூடும்.
  9. என்பாவை முழுதாக ஞாபகத்தில் வைத்திருக்கமுடியாது. புத்தகத்தில்தான் பார்த்துப் படிக்கவேண்டும்.
  10. ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் தொடர்பு இருந்தாலும் தவறில்லை.
  11. என்பா ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறித்தும் எழுதலாம்.
    இவைதான் அவ்விதிகள். நானும் விளையாட்டாக என்பா கவிதைக் குழுமத்தில் சென்று சில என்பாக்களை எழுதினேன். அப்படியே ஆர்வமாகி அது 110 என்பா வரை எழுதிவிட்டேன். திரு அழகியசிங்கர் அவர்கள் தற்போது அதனை என்பா 110 எனும் பெயரில் நூலாக நவீன விருட்சம் வெளியீடாக வெளியிடுகிறார்கள். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்நூல் நவீன விருட்சம் அரங்கில் கிடைக்கும். வாசித்து உங்கள் கருத்துகளை எழுதலாம். வெளிவரவிருக்கும் நூலின் அட்டைப்படத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். திரு அழகியசிங்கர் அவர்களுக்கு என் பேரன்பும் நன்றியும