கவிதை/க.நா.சுப்ரமண்யம்

நடராஜா

எடுத்த காலுக்கும் எடுத்த
கைக்கும் இடையே ஒரு
பிரபஞ்சம்.

குதிரை

தெருவோரத்தில் ஜட்கா
வண்டிக் குதிரை ஓய்ந்து
நிற்கிறது

பாழடைந்த கோயில்

தேடிப் போன சிவன் கோயில்
இடிந்து கிடக்கிறது. உள்ளே
ஒற்றை விளக்கு.

என்னைத் தவிர

உலகத்தில் என்னைத் தவிர வேறு
யாருமேயில்லை என்கிற நினைப்புத்
தோன்றுகிறது எனக்கு.

அல்லி

குளத்தில் ஒரு அல்லி
இன்று பூத்திருக்கிறது.
என் தொல்லைகள் ஒருகணம்
மறந்து விட்டன.

(ஜப்பானியக் கவிகளைப் பின்பற்றி)

(ஞானரதம் மார்ச் 1986)