சென்னை புத்தகக் காட்சி 2023/அழகியசிங்கர்

துளி 262

சென்னை புத்தகக் காட்சி 2023 முன்னிட்டு நான் ஏழுப் புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்.
எல்லாப் புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன. ஸ்டால் எண்கள் 395, 396ற்கு வந்திருந்து புத்தகங்களை வாங்க வரவும்.
ஏழு புத்தகங்களில் என் புத்தகங்கள் மட்டும் 5. மற்ற எழுத்தாளர்கள் புத்தகங்கள் 2. ஒருவர் ஹரணி. இன்னொருவர் ஸிந்துஜா.
ஹரணியின் ‘என்பா 110’ கவிதைகள் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன்.
‘காலமும் சில கணங்களும்’ என்ற தலைப்பின் கீழ் ஸிந்துஜாவின் சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வந்துள்ளேன்.
11 கதைகள் கொண்ட நூல் இது. 127 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.130.
சமீபத்தில் ஸிந்துஜா கதைகள் எழுதாதப் பத்திரிகைகள் இல்லை என்று கூறலாம். ஆனால் ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம் பத்திரிகைகளில் அவர் எழுதுவதில்லை. போட்டிக்குக் கதைகளை அனுப்புவதில்லை.
அவருடைய கதைகள் பெரும்பாலும் இணைய இதழ்களிலும், சிறுபத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.
அவர் கதை எழுதும் வேகத்தைப் பார்க்க எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். அதே சமயத்தில் தரமான கதைகளைத் தருவதிலும் அவர் வல்லவர்.
ஆண் பெண் உறவு நிலைப் பற்றியும், குடும்ப சூழலில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் மெதுவான புன்னகையுடன் அவர் கதைகள் மூலம் தெரியப்படுத்திருக்கிறார்
படிக்கப் படிக்க இன்னும் படிக்க வேண்டும் என்று தூண்டும் விதமாக அவர் கதைகள் இருக்கும். கிட்டத்தட்ட நூறு கதைகளுக்கு மேல் எழுதியிருப்பார். அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டு வருவதில் விருட்சம் பெருமை அடைகிறது.