
பாலங்களைக் கடந்து செல்ல எனக்குப்பயம்
கால்எடுத்து வைக்கும்போது ஊஞ்சலாக ஆடுகிற
மூங்கில் பாலங்களை மட்டும் நான்
சொல்லவில்லை;
மூங்கில் பாலம் பார்த்தே பல ஆண்டுகள் ஆகி விட்டன.
பாலத்துக்கடியில் ஆறு இருந்தாலும்,
இல்லாவிட்டாலும், நுங்கும் நுரையும்
வெள்ளமுமாக
நீர் ஓடிக் கொண்டிருந்நாலும் இல்லாவிட்டாலும்
வெறும் பொன் மணலாகவேத் தேங்கிக்
கிடந்தாலும்
எனக்கு எந்தப் பாலத்தையுமே கடந்து
செல்லப்
பயமாகத் தான் இருக்கிறது. பாலங்கள்
இரு வேறு
உலகங்களை இணைக்கின்றன நான் இருக்கும்
பக்கம் தான் மெய்யென்று எண்ணி நான்
இருக்கிறேன்
பாலங் கடந்து சென்று பொய்யுலகை அடைந்து
அதை மெய்யாகக் காண நேர்ந்து விட்டால்
என்ன
செய்வது என்கிற பயம் தான் எனக்கு. அது
மெய்யானால் புது பழக்க வழக்கங்களை
மேற்கொள்ள
வேண்டிவரும் என் போக்குகளை மாற்றிச்
சமைத்துக்
கொள்ள வேண்டிவரும் அசௌகர்யம்
பாலத்தின்
இரண்டு பக்கங்களுமே பொய்கள் – மெய்
என்பதே இந்த உலகில் இல்லை என்று
சொல்பவர்கள்
இருக்கலாம் அவர்கள் தைரியசாளிகள்
விரர்கள்
மெய்யென்று ஏதோ இருக்கிறது என்று
நம்பியேதான்
என்னால் உயிர் வாழ முடிகிறது அது என்
(துர்ப்) பர்க்கியம்
(ஞானரதம் மார்ச் 1986
