
ஒவ்வொரு கதவாய்த் தட்டிப் பார்த்தும்
உன்னைக் காணவில்லை
எத்தனையோ பேர் அன்னமிட்டும் – என்
வயிறு நிறையவில்லை
இரவும் பகலும் உழன்ற பிறகும்
பொழுது புலரவில்லை
எப்பொழுதோ நான் சிந்திய கண்ணீர்
இன்னும் உலரவில்லை
எடுத்து வந்த மலர்களை நான்
தொடுத்து முடியவில்லை
ஒவ்வொன்றாக உதிர்ந்ததனாலே – என்
கையில் எதுவுமில்லை
என்றேனும் நீ வருவாய் – வேண்டாம் – உன்
நிழலே போதும்
அந்த நிழலை வரவேற்காமல் – என்
கண்கள் உறங்கிடுமா – இந்தக்
கவிதை மறந்திடுமா
