“திருவாதிரைத் திருமந்திரம்” /மீ. விசுவநாதன்

நந்தி தேவனின் நாவிலே நின்றிடும்
நல்ல வாழ்வினைத் தந்திட வைத்திடும்
வந்த சூழ்கலி நீங்கிடச் செய்திடும்
மண்ணில் நல்லன நல்கிடும் மந்திரம்
எந்தப் போதிலும் என்னுளம் ஓதணும்
என்றும் இப்பெயர் என்செவி கேட்கணும்
அந்த நாமசி வாயவே என்றுதான்
ஆழ்ந்தே நானுணர் தேனெனச் சொல்லுவேன்.

(பாவகை: கட்டளைக்கலிப்பா)

(இன்று திருவாதிரைத் திருநாள் – 06.01.2023 16.54 pm)