
கோபுரங்கள் எதற்காக?
வானத்தை மறந்து விடாதே
என்று ஒற்றை விரலால் தட்டிக்
காட்டவா? அல்லது பூமியை
விட்டு நீ உயர உயர எழும்பியே
தீர வேண்டும் என்று சொல்வதற்காகவா?
அல்லது தரையில் பரவி
நின்றால்தான் வானத்தை எட்ட
முடியும் என்று நிரூபிக்கவா?
எத்தனை சின்ன மனுசனானாலும்
உயரப் போக உன்னாலும் முடியும்
என்று உனக்குத் தைரியம்
தருவதற்காகவா? வேறு
எதற்காக இந்தக் கோபுரங்கள்
இப்படித் தோன்றியுள்ளன?
எதற்காகக் கோபுரங்கள்?
(ஞானரதம் மே 1986)
