அரசி/பாப்லோ நெருடா

தமிழில் : க. மோகனரங்கன்


நானுன்னை
அரசி என்றழைத்தேன்
உன்னிலும் உயரமானவர்கள் இருக்கிறார்கள்,உயரமாக
உன்னிலும் தூய்மையானவர்கள் இருக்கிறார்கள்,தூய்மையாக
உன்னிலும் அழகானவர்கள் இருக்கிறார்கள்,அழகாக
ஆனால் நீதான் அரசி.
வீதி வழியே நீ நடக்கையில்
ஒருவரும் உன்னை அறிவதில்லை.
உனது ஸ்படிகக் கிரீடத்தை கவனிப்பவர் எவருமில்லை.
நீ மிதித்துக் கடக்கும்போது
உன் காலடியில் இல்லாதிருக்கும்
செம்பொன் நிறக் கம்பளத்தை யாரும் பார்ப்பதில்லை.
நீ தோன்றும் போது
எனது உடலின் நதிகள்
ஒன்றுகூடி ஒசை எழுப்புகின்றன
மணிகள் வானை உலுக்குகின்றன
வாழ்த்துப் பாடல் ஒன்று உலகை நிறைக்கிறது
நீயும் நானும்
நீயும் நானும் மட்டுமே
அன்பே!
அதைக் கேட்கிறோம்.
***