
எம்மை யாம் அறிந்திலோம்
பின் எங்ஙனம் உம்மை புரிதல் கொள்வோம்
மனம்
வனத்திலும் வானத்திலும் மகிழ்வுடன்
மிதந்தபடி இருக்க
உடல்
பூமியின் ஸ்பரிசத்தில் சயனிக்க
ஆவல் கொள்ள
மாறுபட்ட முரணான கருத்துகளால்
உடல்
மொழி
நிலை பிறழ
துவண்டு போன உடலும் மனமும்
சோர்ந்து இருக்கையில்
ஆன்மா
விழிப்புடன் பற்றற்று பறக்கும் நிலைக்கான
தருணம் எதிர் கொள்ள
காத்திருந்தபடி
காத்திருக்கிறது
–
