இனிக்கும் தமிழ்- 172/டி வி ராதாகிருஷ்ணன்

அறிவானும் அறிவிப்பானும்

அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார்
காரைக்கால் அம்மையார்.

பாடல்

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொருள்

அறிவானுந் தானே – அறிபவனும் தானே
அறிவிப்பான் தானே – அறிவை தருகின்றவனும் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அந்த அறிவாய் தன்னை அறிபவனும் தானே

அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே-அறிந்து கொள்ளும் மெய் பொருளும் தானே

விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் – ஞாயிறு, ஆகாயம், என்று
எல்லா பொருள்களும் அவன்.

அறியும் பொருள்
அறிபவன்
அறியும் அறிவு
அறிவு

எல்லாம் ஒன்றே. ஒன்றில் இருந்து ஒன்று வேறல்ல என்பதே பொருள்

                   -