
இருக்கிற ஏணம் ரெண்டு!
சமைக்கிற சட்டி ஒன்று!
கொடியிலே கோமணத் துண்டு!
காசுக்கு விழுகுதே துண்டு!
கஞ்சிக்கு கெஞ்சிக் கிடக்கோம்!
காலுக்குக் கீழே இருக்கோம்!
கொஞ்சமாய்க் கிடைத்த வரவு!
கொட்டினோம் சாராயம் செலவு!
வள்ளிக்குச் சேலை இல்லை!
கந்தனுக்கு வேலை இல்லை!
சொல்லிக் கொள்ளும் படிக்கு..
வருமானம் ஏதும் இல்லை.!
கொள்ளியாய் எரியும் வயிறு..
கொதிக்குதே வெய்யில் வேறு..
வெள்ளியும் தங்கமும் அறியா..
விளக்கிட முடியா வாழ்வு!
நல்லதோர் திட்டங்கள் கனவு..
நாளொன்று கழிவதே பெரிது..
உள்ளதும் அடகிலே செலவு..
உழைப்பாளி வீட்டு பட்ஜெட்டு!
வரியில்லை! ஏன்? வருமானமில்லை!
வட்டியில்லை! பிள்ளைக் குட்டிகளோடு..
தெருவிலே வாழ்கிறதாலே..
தெரியலே.. ஒருரூபா வரவு.. செலவு.!
