
காலம் அழைக்கிறது
மாறும் காலம் நமை அழைக்கிறது
காலப் பரிமாணம் யாவும் கணினியே
அமைக்கிறது
ஞாலம் அழைக்கிறது
விஞ்ஞானம் நமை
அழைக்கிறது
ஞாலம் சிறுகிராமமாகி
நம்மை இன்று அழைக்கிறது
பாரதி சொன்ன புதுமையாவும்
பார்வையிலே தெரிகிறது
பாரதபூமி மக்கள் கொள்ளும் பார்வையும்
விரிகிறது
பார்போற்றும் திறனாலே
பாரதமே நிமிர்கிறது
பார்முழுதும் பாரதமண்ணின்
பாதிப்பு தொடர்கிறது.
