
காலையில் வந்தேன்
மாலையில் திரும்பினேன்
மாத்தூர் ரயில்வே ஸ்டேசனில்
ரயிலுக்காக காத்திருக்கும்போதுதான்
கோடுகளில் புள்ளியாய்
உன்நினைவு கூடியது
திருவாதிரைத் திங்களில் பவளமல்லிப்
பொருக்கினோம்.
என் குட்டுகளுக்காகவே தப்புகணக்கு
போடுவாய் கள்ளிச்சிறுக்கி.
எரியும் விளக்கின் வெளிச்சத்தில்
லபக்கொன்று
ஓர் நொடி இடாத முத்தத்திற்கு
எப்படியெல்லாம் ஒப்பனை
கைக்குழந்தையோடு ஒருநாள்
வீட்டிற்குவந்தாய்
கடைசிவரை என்னுடன்
பேசவேயில்லை.
(இன்று பழமலய் பிறந்தநாள்)

சனங்களின் கவிஞர் பழமலய் அவர்களுக்கு மகிழ்வினிய பிறந்தநாள் வாழ்த்துப்பூச்செண்டு.
அவருடைய பிறந்த நாளையொட்டி இடம்பெற்றுள்ள கவிதை தனி அழகுடன் இனிக்கிறது.
கவிதையில் கதைசொல்லியாய் எப்போதும் போல இப்போதும்.
நல்ல கவிதையில் “பொறுக்கினோம்” என்பது “பொருக்கினோம்” என்று…. பொங்கலில் கல்லாய் உறுத்துகிறது.
தட்டச்சு செய்பவர் கவனம் கொள்க.