
விண்வெளியில் போரை தடுக்க, விண்வெளிக்கு அணு ஆயுதங்களை கொன்டுபோககூடாது, பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை கொண்டுபோககூடாது என சர்வதேச ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் உடைக்காமல், பேரழிவையும் விண்வெளியில் இருந்து உண்டாக்குவது எப்படி என யோசித்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் 2003ம் ஆண்டு ஒரு திட்டத்தை பரிந்துரைத்தார்கள். அதன்பெயர் புராஜக்ட் தோர்.
அதாவது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை ஏவினால் எளிதில் கண்டுபிடிக்கமுடியும். அதை மறிக்கும் ஏவுகணைகளும் உள்ளன. ஆனால் விண்வெளியில் இருந்து ஒரு அணுகுண்டை ஒரு நகரின் மேல் போட்டால் 15 நிமிடத்தில் பூமியை தொட்டுவிடும். 15 நிமிடத்தில் அதை தடுப்பது எல்லாம் கஷ்டம்.
ஆனால் விண்வெளிக்கு தான் அணுகுண்டை கொண்டுபோககூடாதே?
அதுக்கு தான் குறுக்குவழி இருக்கு, விண்வெளிக்கு 20 அடி நீள, ஒரு அடி அகல டங்க்ஸ்டன் ராடு ஒன்றை கொன்டுபோகவேண்டும். எதாவது நகரம், ராணுவ மையத்தின் மேல் விண்வெளியில் பறந்தபடி அதை வீசவேண்டும். ஒலியை விட 10 மடங்கு அதிகவேகத்துடன் அது பூமியில் விழுகையில் சுமார் 1.6 கிமி பரப்பளவில் உள்ள அனைத்தும் சுத்தமாக துடைத்தெறியப்படும். கைநெடிக் எனெர்ஜி காரணமாக அது குண்டுவெடிப்பது போல் வெடிக்கும். பூமிக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கங்கள் கூட உடைத்து எறியப்படும்.
ஒரு பெரிய டாங்கிப்படை, ரானுவமே அணிவகுத்து வந்தாலும் நாலைந்து ராடுகளை வீசி ஒரு பட்டாலியனையே முடித்துகட்ட முடியும். கடலில் போட்டால் பல கப்பல்கள் காலி. வெறும் ராடுகளே வீசபடுவதால் அதை டிராக் செய்வதும் சிரமம். இது ஆயுதமே இல்லை, வெறும் ராடுதான் என சொல்லி ஐ.நாவையும் ஏமாற்றமுடியும்
அப்புறம் என்ன ஆச்சு? ராடு விண்வெளிக்கு போனதா?
9/11 போர்களால் அப்ப அதை கண்டுக்கலை. இப்ப ஸ்பேஸ் எக்ஸ் வந்ததும் மீண்டும் இதில் ஆர்வம் வந்து இருக்காம்
எதுக்கும் பார்த்து பத்திரமா இருப்போம். தூங்கறப்ப தலைல ராடை போட்டுட போறானுங்க
