திருக்குறள் சிறப்பு/ நாமக்கல் கவிஞர்

இன்றைய நவீன விருட்சம் நிகழ்வில் வாசித்த நாமக்கல் கவிஞர் கவிதை

காடுசென்று குகையடைந்து கண்கள்மூடி எண்ணியும்‌
காவிகட்டி ஓடெடுத்துக்‌ கஷ்டவாழ்க்கை பண்ணியும்‌
தாடிவைத்து மொட்டைதட்டித்‌ தவசியென்ற பேருடன்‌
தரணிமெச்ச ஊர்கள்‌ சுற்றித்தருமபோதம்‌ கூறியும்‌
கூடுவிட்டுக்‌ கூடுபாயும்‌ சித்துசெய்யக்‌ கோரியும்‌
கோடிகாலம்‌ வாழஎண்ணிக்‌ காயகற்பம்‌ தேடியும்‌:
தேடுகின்ற உண்மையாவும்‌ ஓடிவந்து நிற்குமே
தெய்வவாக்கு வள்ளுவன்‌ திருக்குறள்கள்‌ கற்கவே