நீ இல்லாத போது/ஆர் வத்ஸலா

இன்றைய கூட்டத்தில் நான் வாசித்த கவிதை👇

சூல் கொண்ட மேகம்
மெல்திரையாகும் தூறல்
சடசடக்கும்
பெரிய பொட்டுகள்
மூடிய ஜன்னலில்
அருவியாகி கொட்டும் மழை
எல்லாமே
எரியும் காயத்தில்
ஆவியாகிறது

எதற்காக பெய்கிறது இந்த மழை
நீ இல்லாத போது ?